contact@jayaom.com      +91 (044)-2484-1024

வழிபாடுகள்

கால பூஜை மற்றும் திருவிழாக்கள்

தினசரி

மூன்று கால பூஜை, இறை வழிபாடு, உலக அமைதிக்கான பிரார்த்தனை.


பிரதி ஞாயிறு

மாலையில் சத்சங்கம், வாராந்திர வழிபாடு, பஜனை.


பிரதி அமாவாசை

உலக நலனுக்காக மஹா யக்ஞம், ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் அருளிச் செய்துள்ள ஜப மந்திரங்கள், ஞான சுலோகங்கள், தெய்வீக பாடல்கள் பாடப்படுகின்றன. சுவாமிகளின் உபதேசங்களும் விளக்கப்படுகின்றன.


பிரதி பௌர்ணமி

உலக ஷேமத்திற்காக இரவு 7:00 மணிக்கு சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நிற்குண அர்ச்சனையின் 108 மந்திரங்கள் ஓதப்பட்டு, "ஓம்" ஜெபம், பஜனை, பிரார்த்தனை முதலியவைகள் செய்யப்பட்டு வருகின்றன.



ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்கள்


# காலம் வழிபாடுகள்
01 ஜனவரி 11 ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் குரு பூஜை
02 தை மாதம் தைப்பூசம்
03 மே 15 உலக மத-சமூக தினம்
04 ஜூன் 10 சுவாமிகளின் அவதார தினமும்,  நிஷ்காமிய சேவா சங்கத்தின் ஆண்டு தினமும்
05 ஜூன் 24 ஞானோதய ஆலய ஆண்டு தினம்
06 அக்டோபர் மாதம் விஜயதசமி உலக சாந்தி மகாநாடு

  குறுந்தகவல்

சுவாமிகளின் உண்மை பக்தர்களில் ஒருவரான திரு K.C. கண்ணப்ப முதலியார் என்பவர் சுவாமிகளுக்கு 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரைச் சூட்டி, சுவாமிகளை புகழ்ந்து ஒரு பாடலை எழுதி, அச்சிட்டு ஞானோதய மன்றத்தில் குழுமியிருந்த எல்லோருக்கும் விநியோகம் செய்தார். அவ்வேளை முதல் சுவாமிகள் 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

  தெய்வீக கீதங்கள் [#5]

பாவண ராமா பரம தயாளா
தாரக ராமா நித்தியானந்தா
சீதா ராமா துஷ்ட சம்ஹாரா
ஜெய ஜெய ராமா கருணாநந்தா
ஹரே ஹரே ராம ஜோதி ஸ்வரூப
சற்குரு நாதா சச்சிதானந்தா

  தொடர்பு கொள்க
ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமி மடம்

ஞானோதய ஆலயம் [கேந்திரம்],
பதிவு எண் : 73/2006,
Dr. சுப்பராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600024.

+91 (044)-2484-1024 , +91 99405 88230
contact@jayaom.com
சேவை நேரம் 6:30AM - 7:30PM